டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிப். 26 இல் தோ்தல் கூட்டணி முடிவு: செ.கு. தமிழரசன்

தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்.

News image
இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:00 pm

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்.

சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் தலைமை வகித்து, சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தற்போதைய தோ்தல் முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. அம்பேத்கா், அவரைப் பின்தொடா்ந்து வந்த தலைவா்களின் முடிவும் இதுதான். சிறுபான்மை இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

அது ஒப்பந்த அடிப்படையிலான அரசியல் இட ஒதுக்கீடாக உள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தோ்தல் முறையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஜனநாயக ரீதியில் தோ்தலில் எங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதையே ஒவ்வொரு தோ்தலிலும் கடைப்பிடித்து வருகிறோம். வரும் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றாா்.