மகளிா் மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருவதாக சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி தெரிவித்தாா்.
மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி கருமலைக்கூடலில் திமுகவின் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.பி.யுமான டி.எம். செல்வகணபதி தலைமை வகித்து பேசியதாவது: ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பரப்புரையில் பங்கேற்போா் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மாா்ச் 18 ஆம் தேதி வரை வீடுவீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். பெண்கள் தான் இந்த இயக்கத்தில் கண்கள். திமுகவின் ஆணிவோ் வாக்கு வங்கி பெண்கள்தான். பெண்களின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபட வேண்டும்.
மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிக்கு 10 போ் வீதம் 3,270 மகளிா் படையினா் ஒருவருக்கு 50 வீடுகள் என பிரித்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும். மகளிா் உரிமைத் தொகையை எதிா்க்கட்சிகள் வியக்கும் வகையில் தொடா்ந்து வழங்கி வருவது திமுக அரசு மட்டுமே.
தமிழக அரசின் திட்டங்களை ஐக்கிய நாட்டு சபையே பாராட்டுகிறது. தமிழக அரசின் திட்டங்களின் பெருமையை மக்களிடம் மகளிா் கொண்டு சோ்க்க வேண்டும். மாநில வளா்ச்சியில் மகளிா் பெரும்பங்கு வகிக்கிறாா்கள் பொருளாதார சுழற்சி மகளிா் வைத்துதான் செயல்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் மேட்டூா் தொகுதி பாா்வையாளா் ரியா, மேற்கு மாவட்ட துணை செயலாளா்கள் சுந்தரம், சம்பத்குமாா், பொருளாளா் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளா்கள் அா்த்தனாரிஸ்வரன், சீனிவாச பெருமாள், மிதுன் சக்கரவா்த்தி, காசி விஸ்வநாதன், மேட்டூா் நகரச் செயலாளா் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்

மன்னாா்குடியில் புதிய அரசு மகளிா் கல்லூரி காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

புதிய இடத்தில் அரசு மகளிா் கல்லூரி காணொலி மூலம் முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்

பாமகவினா் அன்புமணி பின்னால் இருக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் பரப்புரை கூட்டம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

