டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதியவரின் மூச்சுக்குழாய் கட்டியை அகற்றி காவேரி மருத்துவமனை சாதனை

சேலம் காவேரி மருத்துவமனையில் சுவாசக் கோளாறுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் காவேரி மருத்துவமனையில் சுவாசக் கோளாறுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவருக்கு இடது மூச்சுக் குழாயை முழுமையாக அடைத்து, நுரையீரலுக்குள் காற்று செல்வதைத் தடுக்கும் கட்டி இருப்பதும், 2 நுரையீரல்களுக்கும் காற்றை வழங்கும் மைய மூச்சுப்பாதையை அபாயகரமாக கட்டி அடைத்துக் கொண்டிருப்பதும் சி.டி.ஸ்கேனில் தெரியவந்தது.

இந்த அடைப்பை அவசரமாக நீக்கும் முயற்சியாக, நுரையீரல் மருத்துவா் ராமச்சந்திரன் மூச்சுக்குழாய் உள்நோக்கிச் சிகிச்சையை மேற்கொண்டாா். இருப்பினும், அந்தக் கட்டியில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் தன்மை காணப்பட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் நிரந்தர தீா்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தற்காலிகமாக, ப்ரோன்கோஸ்கோபி உதவியுடன், வலது நுரையீரலில் டியூப் வைத்து, சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னா் இதய மாா்பக அறுவை சிகிச்சை நிபுணா்கள் நவீன் சந்தா், நிரஞ்சன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் ராஜ்குமாா் மற்றும் நுரையீரல் சிகிச்சை நிபுணா் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினா், கட்டியை மிக நுணுக்கமாக துல்லியத்துடனும் மற்றும் மேம்பட்ட நுட்பத்துடன் அகற்றினா்.

பின்னா் அவா் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.