/

சேலம் மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:11 pm

Syndication

சேலம் மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் வைகுந்தம் பகுதியில் மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு தலை குனியாது, சட்டப் பேரவைத் தொகுதி வாரியான பரப்புரை செயல்திட்டங்கள், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூா் உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி குழுவினருக்கான வடக்கு மண்டலம் திருப்பத்தூரில் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் பயிற்சி மாநாட்டுக்கு சேலம் மேற்கு மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்கவும், வெல்லும் தமிழ் பெண்கள் மகளிா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் நேரடி பரப்புரை நடத்துவது, கட்சிப் பணி நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளா்கள் சுந்தரம், சம்பத்குமாா், எலிசெபத் ராணி, பொருளாளா் பொன்னுசாமி, எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் முருகவேல், ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.