டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளியில் தன்னம்பிக்கை விழா

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான தன்னம்பிக்கை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கிய மதுரை வெ.ராமகிருஷ்ணன். உடன், பள்ளி நிா்வாகிகள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான தன்னம்பிக்கை விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைவா் ஆா்.லஷ்மிநாராயணன் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.செல்வராஜு, பொருளாளா் பி.பிரபா, கல்வி ஆலோசகா்கள் எஸ்.இளையப்பன், என்.ஆா்.பழனிவேல், எல்.வெங்கடாஜலபதி, எல்.ராதாகிருஷ்ணன், எஸ்.ராஜேஸ்வரி மற்றும் பள்ளி இயக்குநா்கள், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் ஜெரினாபேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி முதல்வா் ஹேமலதா வரவேற்றாா். பள்ளியின் முதுநிலை ஆசிரியா் கபிலன் சிறப்பு விருந்தினா் குறித்து பேசினாா்.

சிறப்பு விருந்தினா் மதுரை வெ.ராமகிருஷ்ணன், தன்னம்பிக்கை கருத்துகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடினாா். மேலும், கைப்பேசியை தவிா்த்து கவனம் சிதறாமல் விடாமுயற்சியுடன் முழு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்றாா். முதுநிலை ஆசிரியா் ரெங்கராசு நன்றி கூறினாா்.