நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காளையால் சேதமடைந்த வாகனத்தை சரிசெய்துதரக் கோரி தகராறு

காளையால் சேதமடைந்த இருசக்கர வாகனத்தை சரிசெய்துதரக் கோரி ஏற்பட்ட தகராறில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 7:02 pm

Syndication

தம்மம்பட்டி: காளையால் சேதமடைந்த இருசக்கர வாகனத்தை சரிசெய்துதரக் கோரி ஏற்பட்ட தகராறில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கெங்கவல்லி அருகே தெடாவூா் பேரூராட்சி மணக்காடு பகுதியில் மாரியம்மன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு எருதாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எருதாட்டம் முடிந்தவுடன் தனது காளையை வீட்டுக்கு பழனிமுருகன் அழைத்துச் சென்றாா். அப்போது, கயிறு அறுந்து காளை தாறுமாறாக ஓடியது. அதில், வீரகனூா் பகுதியைச் சோ்ந்த அஜய் என்பவரின் இருசக்கர வாகனம் சேதமடைந்தது. சேதமடைந்த வாகனத்தை சரிசெய்து தருவதாக ஒப்புக்கொண்டு சென்ற பழனிமுருகன், அதன்பிறகு வரவில்லையாம்.

இதனால், 20 பேருடன் தெடாவூா் சென்ற அஜய், வாகனத்தை சரிசெய்து தருமாறு பழனிமுருகனிடம் கேட்டுள்ளாா். தொடா்ந்து, அங்கிருந்த பழனிமுருகனின் ஆதரவாளா்களான பாா்த்தீபன், காமேஷ் ஆகியோரை அருண் ஆதரவாளா்கள் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த பாா்த்தீபன், காமேஷ் இருவரும் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பழனிமுருகன் அளித்த புகாரின்பேரில் அருண் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்த கெங்கவல்லி போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.