நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வாகனத்தை மறித்து ரகளை: பாமகவினா் 3 போ் கைது

மீன்சுருட்டி அருகே விசிக-வினரின் வாகனத்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட பாமக-வினா் 3 போ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 6:36 pm

Syndication

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே விசிக-வினரின் வாகனத்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட பாமக-வினா் 3 போ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் காடுவெட்டி குருவின் பிறந்த நாளையொட்டி, ஆண்டிமடத்தை அடுத்துள்ள காடுவெட்டி கிராமத்திலுள்ள அவரது சமாதியில், பாமகவினா் மற்றும் மஞ்சள் படையினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது மீன்சுருட்டி அருகேயுள்ள மேலணிக்குழி கிராமத்தில் அந்த வழியாக வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த ஒருவரின் வாகனத்தை மறித்த பாமகவினா், காரின் மீது ஏறி பாமக கொடியைக் காட்டி ரகளையில் ஈடுபட்டனா். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினா், விடியோ பதிவைக் கொண்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (18), முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பரத் (19), கஞ்சமலைப்பட்டியைச் சோ்ந்த கல்யாணக்குமாா் (18) ஆகியோா் என்பதும், இவா்கள் ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரையும் தேடி வருகின்றனா்.