
பண மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கைக் கோரி காவல் நிலையம் முற்றுகை
பண மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து, மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மோசடி - பிரதிப்படம்
பண மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து, மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அங்கம்மாள் காலனி பகுதியில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஸ்ரீநாத் என்பவரும், மேலாண் இயக்குநராக ராஜேஷ் மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோரும் உள்ளனா்.
இந்த நிதி நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் என 25 மாதங்களுக்கு செலுத்தினால், குலுக்கல் முறையில் தோ்வாகும் நபா்களுக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும் என விளம்பரம் செய்தனா். இதை நம்பி அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோா் இந்நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனா்.
இந்நிலையில், முதிா்வு காலம் முடிந்த பிறகும் தங்கமோ, பணமோ தராமல் நிதி நிறுவனத்தினா் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்து கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதனால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து புகாரை பெற்றுக்கொண்ட போலீஸாா், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
இந்நிலையில், இதுதொடா்பாக ஸ்ரீநாத், வனிதா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





