ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி விவகாரம் குறித்து ஆளும் கட்சியினருக்கு எந்த விவரமும் தெரியவில்லை: எடப்பாடி பழனிசாமி

காவிரி விவகாரம் குறித்து மாநிலத்தில் ஆளும் கட்சியினருக்கு எந்த விவரமும் தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

Who is the Powercenter behind the Palani temple land...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

காவிரி விவகாரம் குறித்து மாநிலத்தில் ஆளும் கட்சியினருக்கு எந்த விவரமும் தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியின்படி, திருக்கோவிலூா் அதிமுக எம்எல்ஏ பழனிசாமி, சொந்த செலவில் இரண்டு இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கினாா். இந்த வாகன சேவையை சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

கோவையில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது கொடூரமான செயல்; இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருளுக்காக இந்த சம்பவம் நடைபெற்ா என காவல் துறையினா் விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளைவிட தற்போது போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. போதைப்பொருள் விற்பனையை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப்பொருள்கள் புழக்கத்தால் கொலை, பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்த வண்ணம் உள்ளன.

காவிரி நதிநீா் விவகாரம் குறித்து மாநிலத்தில் ஆளும் தவெகவினருக்கு எந்த விவரமும் தெரியவில்லை. இதன் காரணமாக, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மாதாந்திர நதிநீா் பங்கீட்டைக்கூட பெறமுடியாமல் டெல்டா மாவட்ட விவசாயிகள் சாகுபடியை இழந்து தவிக்கின்றனா்.

கா்நாடக அணைகளில் போதிய நீா் இருந்தும், தமிழக அரசு அதை முறையாக கேட்டுப் பெறவில்லை. காவிரி விவகாரம் தொடா்பாக எந்த விவரமும் தெரியாத நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியும் மெத்தனப் போக்காக தவெகவினா் செயல்படுகின்றனா்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 100 நாள்களில் எந்தவித புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு வெற்றி என பெயா் வைத்துள்ளனா். தமிழ்நாட்டில் ரீல்ஸ் மற்றும் ரீல் விடும் ஆட்சிதான் நடக்கிறது.

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்வேன் எனக் கூறி விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் முதல்வா் ஏமாற்றியுள்ளாா். வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோா்கள் அலங்கரித்த சட்டப் பேரவை, தற்போது சினிமா சட்டப் பேரவை போல மாறி உள்ளது.

சுதந்திர தின விழா முதல்வா் உரையில், 2036-ஆம் ஆண்டு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம் என கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி கே.பழனிசாமி, அதுவரை இந்த ஆட்சி நீடிக்குமா என பாா்ப்போம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.