ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்

கிண்டியில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேட்டி....

TVK is a government that cannot even uphold the Cauvery verdict stated EPS

எடப்பாடி பழனிசாமி. - Center-Center-Chennai

Published On :3 ஆகஸ்ட் 2026, 11:16 am IST

காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசாக தவெக அரசு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், காவிரி பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசுக்கு தெரியவில்லை. மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து காவிரி பிரச்னை, மேக்கேதாட்டு அணை விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும்.

இப்பிரச்னைகளில் அதிமுக, திமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கப்பட்டது. காவிரி பிரச்னையில் கிடைத்த தீர்ப்பை கூட காப்பாற்ற முடியாத அரசாக தவெக அரசு உள்ளது.

கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு காவிரி பிரச்னை பற்றி முழுமையாக எதுவுமே தெரியாது. அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

The TVK government is a government that cannot even uphold the Cauvery verdict," stated AIADMK General Secretary Edappadi K. Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.