ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரீல்ஸ், ஸ்டிக்கர், வசனம்! தமிழக பட்ஜெட் குறித்து இபிஎஸ் கடும் விமர்சனம்

தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

<P>12/04/2026 - CHENNAI: AIADMK General Secretary and leader of opposition Edappadi K Palanisamy interview with TNIE in Chennai ? Express Photo by Ash

எடப்பாடி பழனிசாமி - Center-Center-Chennai

Published On :5 ஆகஸ்ட் 2026, 1:23 pm IST

தமிழக நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, ரீல்ஸ் ஆட்சி, ஸ்டிக்கர் ஒட்டும் அரசு என்ற கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அவையிலிருந்து வெளியே வந்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது, எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

ஏற்கெனவே இருந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். இதுதான் இந்த பட்ஜெட்டில் பார்க்கப்படுகிறது. தாலிக்கு தங்கம், கறவை மாடுகள் உள்ளிட்டவை அதிமுக ஆட்சியில் இருந்த திட்டங்கள்தான்.

இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 85 நாள்களில் எந்தவொரு புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. வெறும் வசனத்தைப் பேசியே காலத்தை ஓட்டிவிட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் ரீல்ஸ் வெளியிடுவதே இந்த அரசின் சாதனை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இதுவரை செய்யப்படாத திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படும் என வீர வசனங்களைப் பேசினார்கள்.

ஆனால், பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இடம்பெறவில்லை. மகளிர் உரிமைத் தொகை ரு.2,500, குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதிகளை வீசினார்கள். அது பற்றி ஏன் அறிவிப்பில்லை. மருத்துவக் காப்பீடாக ரூ.25 லட்சம் தருவேன் எனச் சொன்னார்களே, அந்த வாக்குறுதி என்னவானது?

ஒரு குழு எப்படி நிதி ஆதாரத்தை பெருக்க முடியும், அதற்கான வழிமுறைகளைக்கூட தெரிவிக்கவில்லை.

ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. அந்தக் கடனை அடைக்க என்ன வழி என சொல்லவில்லை.

மக்கள் நலன் சார்ந்த பிரச்னையில் அதிக கவனம் செலுத்தியது அதிமுக. கூட்டணியை நாங்கள் பார்க்கவில்லை. ஏதோவொரு கால சூழ்நிலையில் வெற்றி பெற்றுவிட்டனர். அதை வெற்றி வெற்றி என கூறுகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

Summary

AIADMK General Secretary EPS has leveled severe criticism against the Tamil Nadu budget.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.