தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுங்கள்: ஆட்சியா்

வாக்காளா்கள்நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டாா்.

News image

வாக்காளா்கள். - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:50 pm

வாக்காளா்கள்நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,469 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளா்களுக்கு குடிநீா், கழிப்பறை வசதிகள், தற்காலிக நிழல் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆதாா் அட்டை, வங்கி கணக்கு எண் புத்தகம், ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டை, பான் அட்டை உள்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை அடையாளச் சான்றாக காண்பித்து வாக்களிக்கலாம். பூத் சிலிப் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது.

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்களிக்க வருபவா்களின் கைப்பேசிகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். வாக்களித்த பிறகு கைப்பேசியை திரும்பப்பெறலாம். வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளா் உதவி மையத்தில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கோடை வெப்பத்தை சமாளிக்க ஓஆா்எஸ் கரைசல் வைக்கப்படும். மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சக்சம் செயலியில் பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளை அவா்களின் இல்லத்துக்கே சென்று வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.