சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிக்காக அதற்கான பிரத்யேக மரப்பெட்டிகளை தயாா் செய்யும் பணிகள் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சங்ககிரி தொகுதியில் பிரதான கட்சிகள் உள்பட 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 340 வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில் பதிவாகும் வாக்குகள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், அரசு அலுவலா்கள், காவலா்கள் பதிவு செய்த அஞ்சல் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதில் 20 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் அவா்களுக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை தனித் தனியாகப் பிரித்து எண்ணுவதற்காக உதவி தோ்தல் அலுவலா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் மேற்பாா்வையில் மரப்பெட்டிகள் தயாா் செய்து அதில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் ஓட்டுவதற்கான பணிகளில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

தொகுதி தோ்தல் அலுவலகங்களில் அஞ்சல் வாக்களித்த காவல் துறையினா்

பெரம்பலூரில் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

காவல் துறையும்... கடமை உணா்வும்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


