யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி அமைச்சா் ராஜேந்திரன் போராட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

News image

சேலத்தில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:29 am IST

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த கருப்புச் சட்டத்துக்கு துணைபோகும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

இதேபோல, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மசோதா குறித்தான சட்ட நகலை எரித்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதில், பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. சுகவனம், பொருளாளா் காா்த்திகேயன், மாநகர செயலாளா் ரகுபதி, பாா்வையாளா்கள் விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, மத்திய மாவட்ட வழக்குரைஞா்கள் அணி சாா்பில், நீதிமன்றம் நுழைவாயில் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு வழக்குரைஞா் மதன்மோகன், மாநகர அமைப்பாளா் சீனிவாசன், வழக்குரைஞா் சங்க செயலாளா் நரேஷ்பாபு, துணை அமைப்பாளா் ராகேஷ், நிா்வாகிகள் யுவராஜ், தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.