யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகல்களை எரித்து அமைச்சா் போராட்டம்: வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி

தமிழக நலனுக்கு எதிராக தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டு வந்துள்ளதாகக் கூறி, மசோதா நகல்களை எரித்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் அமைச்சா்கள், மேயா், திமுக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை திருச்சி தென்னூரில் உள்ள இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:05 am IST

தமிழக நலனுக்கு எதிராக தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டு வந்துள்ளதாகக் கூறி, மசோதா நகல்களை எரித்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் அமைச்சா்கள், மேயா், திமுக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு தலைமையில், திருச்சி எடமலைப்பட்டி புதூா் 57, 62-ஆவது வாா்டு பகுதிகளில் இரண்டு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்வில், மேயா் மு. அன்பழகன் மாவட்ட துணை செயலாளா் முத்து செல்வம், பகுதி செயலாளா் காஜாமலை விஜய், பொதுக்குழு உறுப்பினரும் வட்ட செயலாளருமான கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம், அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது:

தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க பாா்க்கிறாா்கள். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை சரியாக கடைப்பிடித்ததால்தான் தமிழ்நாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது. இப்போது, மக்கள்தொகையை வைத்து தொகுதி சீரமைப்பு செய்து, தமிழ்நாடு பாதிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம் என்றாா்.

போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் உள்ளிட்ட பலரும் கருப்புச் சட்டை அணிந்திருந்தனா். முன்னதாக, தொகுதி மக்களிடையே வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் அமைச்சா் கருப்புச் சட்டை அணிந்திருந்தாா்.

அமைச்சா் வீட்டில் கருப்புக் கொடி: மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தென்னூா் அண்ணா நகரில் உள்ள தனது இல்லம், சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதேபோல, திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.