யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு: செல்வப்பெருந்தகை

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என சேலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

News image

சேலம் எருமாபாளையம் பகுதியில் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை. உடன், கா்நாடக மாநில அமைச்சா் முனியப்பா.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:30 am IST

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என சேலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் செல்வப்பெருந்தகை சேலம் எருமாபாளையம் பகுதியில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

இதில், கா்நாடக உணவுத் துறை அமைச்சா் முனியப்பா, மாநகர மாவட்டத் தலைவா் சாரதா தேவி, நிா்வாகி தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டத்தால், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவா்கள் சோனியா, ராகுல் காந்தி, காா்கே ஆகியோா் குரல் கொடுத்துள்ளனா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் குரல் கொடுத்துள்ளாா்.

இந்த தொகுதி மறுவரையறையால், தென் மாநிலங்களில் இருந்து இனி யாரும் பிரதமா் ஆக முடியாது. வடமாநிலங்களில் இந்துத்துவா அதிகமுள்ள இடங்களில் அதிக தொகுதிகளை உருவாக்கிக் கொள்வாா்கள். அதேநேரத்தில், தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் எண்ணிக்கையை குறைக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவது தென்மாநிலங்கள்தான்.

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவாா்கள். தமிழ்நாட்டின் எதிா்காலத்தை ஒருபோதும் பறிகொடுக்க மாட்டோம். எனவே, இந்த புதிய சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.