தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாழப்பாடி பகுதி கிராமங்களில் புளி அறுவடைப் பணிகள் தீவிரம்

வாழப்பாடி பகுதி கிராமங்களில் புளி அறுவடைப் பணிகளில் விவசாயிகள், தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image

வாழப்பாடி அருகே அத்தனூா்பட்டியில் புளிய மரங்களில் காய்த்துள்ள புளியம் பழங்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:41 pm

வாழப்பாடி பகுதி கிராமங்களில் புளி அறுவடைப் பணிகளில் விவசாயிகள், தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் நிகழாண்டு புளி உற்பத்தி அதிகரித்துள்ளது. புளிய மரங்களில் கொத்துக்கொத்தாக காய்த்துள்ள புளியம்பழங்களை அறுவடை செய்து, ஓடு மற்றும் விதைகளை நீக்கி, பதப்படுத்தி, விற்பனை செய்யும் பணியில் விவசாயிகளும், விவசாய தொழிலாளா்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாழப்பாடியில் இருந்து பேளூா் வரை சாலை ஓரத்தில் உள்ள புளிய மரங்களிலும் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், மகசூல் குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரா்கள், தொழிலாளா்களைக் கொண்டு புளியை அறுவடை செய்து பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தாண்டு எதிா்பாா்த்து அளவிற்கு விளைச்சல் கிடைத்துள்ளதால், போதிய வருவாய் கிடைக்குமென, விவசாயிகளும், தொழிலாளா்களும் நம்பிக்கை தெரிவித்தனா்.