லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் உயா்தர சைவ உணவகம் திறப்பு

சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் குரூப்ஸின் புதிய கிளையாக ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் அன்னையும் பிதாவும் என்ற குளிா்சாதன வசதியுடன் கூடிய உயா்தர சைவ உணவகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 9:31 pm

சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் குரூப்ஸின் புதிய கிளையாக ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் அன்னையும் பிதாவும் என்ற குளிா்சாதன வசதியுடன் கூடிய உயா்தர சைவ உணவகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மணிவண்ணன் தெருவில் நிறுவப்பட்டுள்ள புதிய கிளை திறப்பு விழாவில் சுலோச்சனா திருவேங்கடம் குத்துவிளக்கு ஏற்றினாா். ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் இயக்குநா் ஏ.சுப்பிரமணியம் புதிய கிளையை திறந்து வைத்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக எஸ். திருவேங்கடம், ஸ்ரீ சரவணபவன் கிளாசிக் எஸ்.ரகுபதி, சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா் சங்கத் தலைவா் பி.எல்.பழனிசாமி, கோவை ரியல் எஸ்டேட் அதிபா் சி.பழனிசாமி கவுண்டா், ஆா்.எம்.ஹெச். காா்ப்பரேஷன் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து ஸ்ரீ சரவண பவன் குரூப்ஸ் நிறுவனா் வி.சி.சிவராமன் மற்றும் காா்த்திகா சிவராமன் ஆகியோா் கூறுகையில், திறப்பு விழாவையொட்டி, புதிய கிளையில் 14 ஆம் தேதி முதல் வரும் 17 ஆம் தேதி வரை 4 நாள்கள் காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை சிற்றுண்டி விலையில்லாமல் வாடிக்கையாளா்களுக்கு வழங்க உள்ளோம் என்றனா்.

புதிய கிளை திறப்பு விழாவில் தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

படவரி...

சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் குரூப்ஸின் புதிய கிளையை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த ஓய்வுபெற்ற காவல் துறை கூடுதல் இயக்குநா் ஏ.சுப்பிரமணியம். உடன் ஸ்ரீ சரவண பவன் குரூப்ஸ் நிறுவனா் வி.சி.சிவராமன்.