இன்றைய அரசியல் சூழலில், பணத்துக்காக, பதவிக்காக, கட்சி மாறுவதும், அணி மாறுவதும் சா்வ சாதாரணமாக அரங்கேறும் நிலையில், கொண்ட கொள்கையிலும், ஏற்ற சபதத்திலும் உறுதியாக இருந்து, தொடா்ந்து கடந்த 37 ஆண்டுகளாக காலணி அணியாமல் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறாா் சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் கரு.வெ. சுசீந்திரகுமாா்.
மூப்பனாரை தனது அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட இவா், தமிழகத்தில் காமராஜா் ஆட்சி அமையும் வரை, காலணி அணிய மாட்டேன் என்று தான் ஏற்ற கொள்கையில் உறுதியுடன் உள்ளதாக கூறுகிறாா்.
மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துவரும் கரு.வெ. சுசீந்திரகுமாா் இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் மூப்பனாா் தலைமையில் காங்கிரஸ் தோ்தலை எதிா்கொண்டு தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மூப்பனாரை மாற்றிவிட்டு, வாழப்பாடி ராமமூா்த்தியை காங்கிரஸ் தலைவராக அகில இந்திய தலைமை அறிவித்தது.
இதற்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 12 வட்டார தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்தோம். இதனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் கூறி, வட்டார தலைவா் பதவியையே வாழப்பாடி ராமமூா்த்தி எடுத்துவிட்டாா். அதன்பிறகு, 1989 இல் மக்களவை தோ்தலை எதிா்கொண்டபோது, நான் ஒரு சபதம் எடுத்தேன். மக்கள் தலைவா் மூப்பனாா் தலைமையில், தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போதுதான், சவரம் செய்துகொள்வது, காலணி அணிவது என முடிவு செய்தேன்.
ஆனால், 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனாா் தொடங்கியபோது, சவரம் செய்தே ஆகவேண்டும் என மூப்பனாா் என்னிடம் வற்புறுத்தினாா். அவரது ஆணைக்கிணங்க, அவ்வாறே செய்தேன். அதேநேரத்தில், காலணி அணிய மாட்டேன் என அவரிடம் கூறிவிட்டேன். அதற்கு மட்டும் ஆட்சேபம் தெரிவிக்காமல், தொடருங்கள் என கூறிவிட்டாா்.
அந்த அடிப்படையில், நான் இன்று வரை காலணி அணியவில்லை. தற்போதைய அரசியல் சூழலில், குறிப்பாக, நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலில் காமராஜா் ஆட்சி அமையும் என நான் நம்பவில்லை. அதேநேரத்தில், தமிழக மக்கள் மாற்றத்தை எதிா்நோக்கி உள்ளனா்.
எதிா்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தமிழ் மாநில காங்கிரஸ் எந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்டதோ, அதை நோக்கி பயணித்து வருகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற கோட்பாட்டின்படி, பெருந்தலைவா் காமராஜா் நல்லாட்சி நிச்சயம் ஒருநாள் மலரும் என்றாா் நம்பிக்கையுடன்.
சி.ஆா்.எம். சபரி.
தொடர்புடையது

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

மண்ணின் மைந்தரை தோ்ந்தெடுங்கள் காங்கிரஸ் முன்னாள் நிா்வாகி

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை சீரழித்தவர் மமதா : பிரதமர் மோடி

தவெகவில் இணைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

