டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டியில் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடிதூவி அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:16 pm

Syndication

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டியில் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடிதூவி அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தளவாய்ப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜு மனைவி இந்திராணி (50). இவா் அரசு நடுநிலைப் பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு நடந்துசென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத இளைஞா், இந்திராணியின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு அவா் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து இந்திராணி ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் சிவசக்தி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.