சேலம் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் உதவி பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 2,091 போ் விண்ணப்பித்திருந்தனா். சேலம் மாவட்டத்தில் புனிதபால் மேல்நிலைப் பள்ளி, சேலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிா் மேல்நிலைப் பள்ளி, புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குகை மேல்நிலைப் பள்ளி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித மரியன்னை மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் 1,912 போ் பங்கேற்றனா்.