சேலத்தில் களைகட்டியது தீபாவளி விற்பனை
தீபாவளியை முன்னிட்டு சேலம் தாதுபாய் குட்டைப் பகுதியில் திரளான மக்கள் குடும்பத்துடன் வந்து துணி வாங்கிச் சென்றனர்.


தீபாவளியை முன்னிட்டு சேலம் தாதுபாய் குட்டைப் பகுதியில் திரளான மக்கள் குடும்பத்துடன் வந்து துணி வாங்கிச் சென்றனர்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாள்களாக சேலத்தில் உள்ள அனைத்து துணிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும் பொதுமக்கள் திரளாக வந்து துணி மற்றும் தீபாவளி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ளதால் சேலத்தில் உள்ள அனைத்து துணிக் கடைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் கூட்டம் அலைமோதியது.
சேலம் தாதுபாய் குட்டைப் பகுதியில் திடீர் துணி மார்க்கெட் போடப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று பிற்பகலில் திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து துணி மற்றும் தோடு, வளையல்களை வாங்கிச் சென்றனர். திரளான பெண்கள் குழந்தைகளுடன் வந்து துணி வகைகள் வாங்கி சென்றனர். இதனால் தாதுபாய் குட்டைப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த துணி வியாபாரிகள் தெருக்களில் கடைகள் போட்டு புடவைகள் மற்றும் பெண்களுக்குத் தேவையான துணி வகைகள் விற்றதால் திரளான பெண்கள் இங்கு வந்து துணி வகைகளை வாங்கிச் சென்றனர். லேசான சாரல் மழை பெய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் பொருள்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

சேலம் கடை வீதிக்கு புத்தாடை எடுக்க வரும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தின் பெயரில் எவராவது உலாவுகிறார்களா என்று தொலைநோக்கு கருவி மூலம் கண்காணிக்கும் காவலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...