தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நீடாமங்கலத்தில் அம்பேத்கர் நினைவு நாள்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் 65ஆவது நினைவு நாள் நீடாமங்கலம் ஒன்றியத்தில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

News image
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நீடாமங்கலத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர்.
Updated On :28 ஜனவரி 2024, 5:38 am

DIN

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் 65ஆவது நினைவு நாள் நீடாமங்கலம் ஒன்றியத்தில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி எஸ் . கலியபெருமாள் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி. ஜான் கென்னடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை செயலாளர். வி. தமிழ்மணி, மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சுமதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் டி. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஒன்றிய குழு உறுப்பினர். பி. காளியப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைசிறுத்தை- நீடாமங்கலம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் புதியவன் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரக்குமார், கட்சி நிர்வாகிகள் பிரசாத், மன்சூர், அண்ணாதுரை, விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.