நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வட்ட வழங்கல் அலுவலகத்தில் மது போதையில் அதிகாரி: பொதுமக்கள் போராட்டம்

சேலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மது போதையில் பணியில் இருந்த அதிகாரியைக் கண்டித்து பொதுமக்கள்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:44 am

க. தங்கராஜா

சேலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மது போதையில் பணியில் இருந்த அதிகாரியைக் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைக்கான கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி கடந்த ஜனவரி 2-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து மார்ச் 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

 இந்த நிலையில் சேலம் வட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்தாள் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட ஏராளமானவர்கள், மாவட்ட மைய நூலகம் அருகேயுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு தினசரி வந்து உள்தாள் பெற்றுச் செல்கின்றனர். இதைத் தவிர பெயர் மாற்றம், சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

 வழக்கம்போல வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 9 மணி முதல் 300-க்கும் அதிகமானவர்கள் திரண்டிருந்தனர். காலை 10 மணிக்கு பிறகும் அதிகாரிகள் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. விசாரணையில் வட்ட வழங்கல் அலுவலரும் சில அதிகாரிகளும் முகாமிற்கு சென்றுவிட்டதாக மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பின்னர் இளநிலை உதவியாளர் சதாசிவம் உள்ளிட்ட மேலும் 3 பேர் வேலைக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்த மக்களுக்கு பணிகளை முடித்துக் கொடுக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சதாசிவம் மது அருந்திவிட்டு பணியைத் தொடர இயலாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அங்கிருந்த அதிகாரிகளை சரமாரியாகத் திட்டத் தொடங்கினர்.

 மேலும் அலுவலகத்தில் இருந்து வெளியேறி மைய நூலகம் அருகில் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து மக்களை சமாதானம் செய்தனர். பணி நேரத்தில் மது போதையில் இருந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

நெரிசலான இடத்தில் செயல்படும் அலுவலகம்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான மாநில அரசு அலுவலகங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வட்ட வழங்கல் அலுவலகம் மைய நூலகம் அருகேயுள்ள மிகச் சிறிய கட்டடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 மூட்டை மூட்டையாக ஆவணங்கள் நிறைந்துள்ள இந்த கட்டடத்தில் ஆவண மூட்டைகளுக்கு இடையே அமர்ந்து அதிகாரிகள் வேலை செய்கின்றனர். சுமார் 50 பேர்களுக்கு மேல் வந்தாலேயே நெரிசல் ஏற்படக் கூடியதாக இந்த அலுவலகம் உள்ளது. எனவே வட்ட வழங்கல் அலுவலகத்தை விசாலமான வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.