தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஏற்காட்டில் 60 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: காபி தோட்டத் தொழிலாளர்கள் 30 பேர் காயம்

சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் அருகே காபி தோட்டத் தொழிலாளர்கள்

Updated On :17 அக்டோபர் 2012, 10:25 am

சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் அருகே காபி தோட்டத் தொழிலாளர்கள் சென்ற வேன், சுமார் 60 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஏற்காட்டை அடுத்த செம்மநத்தம் கொளகூர் பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் கண்ணப்பாடி, கொளகூர், பூமரத்தூர் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியளவில் பணி முடிந்ததும் தொழிலாளர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அந்த வேனில் 12 பெண்கள் உள்ளிட்ட சுமார் 40 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வேன் செங்கல்காடு எஸ்டேட் பகுதியில் மலைப் பாதையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தோட்டத் தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

 இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ஏற்காடு தீயணைப்பு மீட்புப் படையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சேலத்தி்ல் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 காயமடைந்தவர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களில் லட்சுமி, வள்ளி, பழனியம்மாள், வெங்கடாஜலம், சிவக்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.