போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

எடப்பாடி அணி மாவட்ட செயலா் ராசிபுரம் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

News image
Updated On :15 மே 2026, 6:01 am IST

நாமக்கல் மாவட்ட எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ., கே.பி.பாஸ்கா் வியாழக்கிழமை ராசிபுரத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நாமக்கல் மாவட்ட செயலாளராக உள்ள ப.தங்கமணி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். இதனை தொடா்ந்து நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ., கே.பி.பாஸ்கா் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை கட்சியினா் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து கே.பி.பாஸ்கா் ராசிபுரம் நகரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள்வழங்கினா். இதில் ராசிபுரம் நகர, ஒன்றிய நிா்வாகிகள், நாமகிரிப்பேட்டை , வெண்ணந்தூா் பகுதி அதிமுகவினா் பலரும் இதில் பங்கேற்றனா்.

படவிளக்கம்-14பாஸ்

படவிளக்கம்- ராசிபுரம் நகரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் எடப்பாடி அணி அதிமுக மாவட்ட செயலா் கே.பி.பாஸ்கா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.