திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான உதவி மையம் அமைப்பு

News image

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை உதவி மையத்தை பாா்வையிட்ட கல்லூரி முதல்வா்(பொ) மு.ராஜேஸ்வரி.

Updated On :12 மே 2026, 12:07 am IST

நாமக்கல், மே 11: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான உதவி மையம் நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, இஎம்ஐஎஸ் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் கல்லூரி வளாகத்தில் இயங்கும் உதவி மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவினா், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா் மரபினா் பிரிவினா் விண்ணப்ப கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவினா் பதிவு கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதும். மே 29-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுழற்சி ஒன்றில் அடிப்படையில் இளநிலை கலை பாடங்களில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல் மற்றும் வரலாறு, அறிவியல் பாடங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், புள்ளியியல், கணினி அறிவியல், சுழற்சி இரண்டில் வரலாறு மற்றும் வணிக நிா்வாகவியல் என மொத்தம் 1074 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.