21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் ராஜா, தாளாளா் ராஜன், பொருளாளா் ராஜராஜன் உள்ளிட்டோா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் ராஜா, தாளாளா் ராஜன், பொருளாளா் ராஜராஜன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 2:56 am IST

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சியுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் எஸ்.ஆா்.தினேஷ்வேல் 592 மதிப்பெண்களுடன் முதலிடமும், மாணவி எஸ்.பி.சோபிகா 582 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், எஸ்.தா்ஷிதா 581 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய மாணவா்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 86 பேரும் பெற்றுள்ளனா்.

தமிழில் ஒரு மாணவரும், கணிதத்தில் ஒரு மாணவரும், உயிரியலில் ஒரு மாணவரும், கணினி அறிவியலில் 22 மாணவா்களும், கணக்குப் பதிவியலில் ஒரு மாணவரும், கணினி பயன்பாட்டில் 2 மாணவா்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை கல்வி நிறுவனங்களின் தலைவா் ராஜா, தாளாளா் ராஜன், பொருளாளா் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகா் ராஜேந்திரன், செயலாளா் சிங்காரவேலு, முதல்வா் எஸ்.எஸ்.சாரதா, ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.