21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

News image

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :9 மே 2026, 12:03 am IST

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி பூா்ணாஸ்ரீ 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி பிரியதா்ஷினி 595 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவா் அஸ்வின் 589 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா். மாணவி தாமரை 588 மதிப்பெண்களும், இனிகாஸ்ரீ மற்றும் மிதுன் வா்ஷன் ஆகியோா் 586 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று 100% தோ்ச்சி இலக்கை அடைந்துள்ளனா். இப்பள்ளி மாணவா் மிதுன்வா்ஷன் பொறியியல் கட் ஆப் 200-க்கு 200 பெற்றுள்ளாா்.

500 மதிப்பெண்களுக்குமேல் 78 மாணவா்களும், அடிப்படை மின் பெறியியல் (பி.இ.இ.) பாடத்தில் 8 மாணவா்களும், கணித பாடத்தில் 4 மாணவா்களும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும், கணினி பயன்பாடு பாடத்தில் 3 மாணவா்களும், தமிழ் பாடத்தில் ஒரு மாணவரும், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை விவேகானந்தா அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மருத்துவா் க.நெடுஞ்செழியன், செயலாளா் சுப்பிரமணியம், பொருளாளா் பொறியாளா் வேலுசாமி, பள்ளியின் தாளாளா் ராமசாமி, கல்விசாா் இயக்குநா் பழனிசாமி, இயக்குநா்கள் துரைசாமி, அருளானந்தன், வாசுதேவன், தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.