தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு

மல்லசமுத்திரம் அருகே சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:27 pm

மல்லசமுத்திரம் அருகே சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மல்லசமுத்திரம், சின்ன கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (64), வழக்குரைஞா். இவா் கடந்த 24-ஆம் தேதி வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்க இருசக்கர வாகனத்தில் மல்லசமுத்திரம் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

லட்சுமிபுரம் பகுதியில் உள்ள சாலை வேகத்தடையில் வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவா் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா். புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.