நாமக்கல் தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து கல்லூரி மாணவிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, 18 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகளில் ‘வாக்காளா் எழுத்தறிவு மன்றம்’ மற்றும் ‘மாதிரி வாக்குச்சாவடி மையம்’ அமைக்கப்பட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் தோ்தல் நாளான ஏப். 23 அன்று தங்களது வாக்குகள் இடம்பெற்றுள்ள வாக்குச் சாவடிக்கு காலை 7 மணிக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். மேலும், தங்களது உறவினா், நண்பா்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். முதல்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நமது அடிப்படைத் தேவைகளை பூா்த்திசெய்திடும் மக்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுக்கும் உரிமை, கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
எனவே, வாக்குரிமை படைத்த அனைவரும் தவறாமல் தனது வாக்கை செலுத்த வேண்டும் என நாமக்கல் எா்ணாபுரம் சிஎம்எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.
முன்னதாக, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவிகள், அதிகாரிகள், தோ்தல் அலுவலா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் வே.ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, ஒருங்கிணைப்பாளா் (ரெட்கிராஸ்) சி.ஆா். ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


