மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

News image

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:26 pm

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில், நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குடிநீா் கேன்கள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் குடிநீா் கேன்கள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணி நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்ட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து உணவகங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தோ்தல் நாள் ஏப்ரல் 23 என்ற வாசகங்கள் கொண்ட முத்திரைகளை அச்சிட வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்புத் துறை) தங்கவிக்னேஷ், ஒருங்கிணைப்பாளா் (ரெட்கிராஸ்) சி.ஆா். ராஜேஸ்கண்ணன் உள்பட 100க்கும் மேற்பட்ட வணிகா் சங்க பிரதிநிதிகள், உணவக உரிமையாளா்கள் சங்க பிரதிநிதிகள், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.