ஸ்ரீ ராமநவமியையொட்டி, நாமக்கல் ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் சந்தனக் காப்பு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் ராமநவமியை முன்னிட்டு பெருமாள், கிருஷ்ணா், ஆஞ்சனேயா், ராமா், சாய்பாபா கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த வகையில், நாமக்கல் - திருச்சி சாலை இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் ஸ்ரீ ராமநவமி சந்தனக் காப்பு (உரூஸ்) திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, காலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை காகடா ஆரத்தி, கொடியேற்றம், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மங்கள ஆரத்தி, அனுமன் சாலீசா பாராயணம், சந்தனக் காப்பு, மாலை, இரவு ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய் ஹா்ஷா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


