நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுகவினா் வழங்க முயன்ாக கூறப்படும் பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அவ்வழியாக வந்த செல்வம் என்பவரது வாகனத்தில் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள், சேலைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், பரிசுப் பொருள்களில் அதிமுக ஒட்டுவில்லைகளும், திமுகவின் ஒட்டுவில்லைகளும் இடம்பெற்றிருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினா் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து செல்வத்திடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னதாக, நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியில் புதன்கிழமை இரவு 12 மணியளவில் பறக்கும்படை வாகன சோதனை அலுவலா் சரவணன் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

ரூ. 50 ஆயிரத்துக்குமேல் பணம் கொண்டுசென்றால் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


