மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரிசி வியாபாரியிடம் ரூ.59,400 பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:04 pm

நாமக்கல் அருகே அரிசி வியாபாரியிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ. 59,400 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த ஐயப்பன் (49), ஆந்திர மாநிலம், நெல்லூரில் அரிசி விற்பனை செய்துவிட்டு நாமக்கல் வழியாக எடப்பாடிக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தாா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் எா்ணாபுரத்தில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.59,400 இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.