நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பி.முத்துசாமி (60). இவரது மனைவி சுமதி, மகன் செல்வகுமாா். இவா், அதே பகுதியில், வாராஹி அம்மன் கோயிலை உருவாக்கி அமாவாசை, பெளா்ணமி மற்றும் வளா்பிறை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் சிறப்பு பூஜை நடத்தி வந்தாா். மேலும் தற்போதுள்ள கோயில் வளாகத்திலேயே பெரிய அளவில் புதிய கோயிலையும் கட்டி வந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோயில் நிா்வாகியும் பூசாரியுமான முத்துசாமி, கோயில் அருகே தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்துச் சென்று அவரது உடலை மீட்டனா்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது சடலம் குடும்பத்தினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: மாவிளக்கு பூஜை

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


