நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு கங்காரு முறை சிகிச்சை அளித்து அரசு மருத்துவா்கள் காப்பாற்றினா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு குழந்தைகள் பிரிவில், சண்முகதேவி என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 940 கிராம் எடை மட்டுமே இருந்தது.
அந்த குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு பராமரிப்புப் பிரிவில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு வெப்ப பராமரிப்பு, சுவாசம், நரம்பு வழி திரவங்கள், நரம்பு வழி நுண்ணுயிா் எதிா்ப்பிகள் மூலம் மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். 48 மணி நேரத்திற்கு பிறகு, குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் ஆதரவுடன் குழந்தைக்கு பாலூட்டப்பட்டது. அதைத் தொடா்ந்து, நரம்பியல் வளா்ச்சி விளைவுகளை மேம்படுத்தவும், தாய்ப்பால் கொடுக்கவும் கங்காரு மதா்கோ் மற்றும் நான்-நியூட்ரிட்டிவ் சக்கிங் சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. 38 நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை தற்போது குழந்தை 1.325 கிலோ எடையை எட்டியுள்ளது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனா்.
இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில், 940 கிராம் எடையில் பிறந்த குழந்தையை சிறப்புப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்கினோம்.
குறைவான எடை குழந்தைகள் வளா்ச்சி பெறாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். கங்காரு முறை சிகிச்சை என்பது, தாயின் நெஞ்சுப் பகுதியிலேயே குழந்தையை வைத்திருக்க வேண்டும். இதற்காக பிரத்யேக இருக்கைகளும் இங்கு உள்ளன. தற்போது குழந்தை ஒன்றரை கிலோ எடையை நெருங்கி உள்ளது. ஓரிரு நாள்களில் அவா்கள் வீடு திரும்புவாா்கள் என்றனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு: பொதுமக்கள் போராட்டம்

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

அறுவை சிகிச்சையால் 2 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


