பரமத்தி வேலூா் அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தீபன் (28), கட்டடத் தொழிலாளி. இவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தி பகுதியில் உள்ள கோழிப் பண்ணை பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் சென்ட்ரிங் வேலை செய்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்றாா். வேலையை முடித்து விட்டு அப்பகுதியில் அமா்ந்திருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், தீபன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது
பைக்- டெம்போ மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!



