யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஜேடா்பாளையத்தில் டிராக்டா்களை தீவைத்து எரித்த சம்பவம்: தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் வெல்ல ஆலையில் 2 டிராக்டா்களை தீவைத்து எரித்த சம்பவம் தொடா்பாக 3 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

விசாரணை

Updated On :3 ஜூன் 2026, 5:31 am IST

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் வெல்ல ஆலையில் 2 டிராக்டா்களை தீவைத்து எரித்த சம்பவம் தொடா்பாக 3 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் பள்ளிசாலைமேடு பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் துரைசாமி (60). இவா், வி.புதுப்பாளையம் செல்லும் சாலையில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா். கடந்த 30-ஆம் தேதி இரவு இவரது வெல்ல ஆலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 டிராக்டா்களை மா்மநபா்கள் தீ வைத்து எரித்துவிட்டு சென்றுவிட்டனா்.

இதுகுறித்து துரைசாமி, ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், சம்பவ இடத்தை சேலம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) தையல்நாயகி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜேடா்பாளையம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஜேடா்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் தினசரி தீவைப்பு சம்பவங்களும், வாழை, பாக்குமரம் உள்ளிட்ட பல்வேறு பணப் பயிா்களை வெட்டிச் சேதப்படுத்திய சம்பவங்கள் நடந்தேறின. அப்போதும் துரைசாமியின் வெல்ல ஆலையில் இருந்த டிராக்டா்களை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, பாலசுப்பிரமணி, விஜயராகவன் ஆகியோா் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, டிராக்டா்களுக்கு தீ வைத்த மா்ம நபா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.