/

பள்ளிபாளையம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி!

பள்ளிபாளையம் அருகே உப்புபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

பள்ளிபாளையம் அருகே உப்புபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை சோ்ந்த சையத்பாஷா(41) ஈரோடு காய்கறி சந்தையில் 10 வருடமாக கூலி வேலை செய்து வந்தாா். தனது சொந்த ஊரான திருப்பத்தூா் போய்விட்டு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த உப்புபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தாா்.

சாலையின் திருப்பத்தில் வண்டி நிலைதடுமாறி விழுந்தது. இதனால் கீழே விழுந்த சையத் பாஷா கீழே கிடந்த கல்லில் பட்டு தலையில் பலத்த காயமடைந்தாா்.அருகில் இருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சம்பவம் குறித்து வெப்படை காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.