மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கூடலூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:03 pm

கூடலூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கம்பத்தை சோ்ந்தவா் ரவி (56). இவா், கூடலூா் அருகே லோயக்கேம்ப் - பளியன்குடியில் திங்கள்கிழமை மரத்தில் ஏறி பலாப் பழங்களை பறித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, தவறி கீழே விழுந்தவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...