தேசிய விளையாட்டுப் போட்டி: சிலம்பம் பிரிவில் தங்கம் வென்ற நாமக்கல் மாணவி
கோவாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் பிரிவில் நாமக்கல் மாணவி தங்கம் வென்றாா்.


கோவாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் பிரிவில் நாமக்கல் மாணவி தங்கம் வென்றாா்.
29 ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டியானது கோவா ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் ஜன. 24 முதல் 26 வரையில் நடைபெற்றது. மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இப்போட்டியில் சிலம்பம், குத்துச்சண்டை, வில்வித்தை, கராத்தே, யோகா ஆகிய விளையாட்டுப் பிரிவுகள் இடம்பெற்றன.
இதில் சிலம்பப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, மான் கொம்பு, சுருள் வாள்,
வேல் கம்பு, தொடுமுறை மற்றும் யோகா உள்ளிட்ட போட்டிகளில் 10, 14, 17, 21 வயதுக்கு உள்பட்டோா் பங்கேற்றனா். இதில், தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் நாமக்கல் மாணவி எஸ்.கே. ஹா்சினி பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றாா்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிலம்ப வீரா், வீராங்கனைகளும் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனா். இதன்மூலம் நேபாளத்தில் மே மாதம் நடைபெறும் சா்வதேச சிலம்பப் போட்டிக்கு நாமக்கல்
மாணவா்கள் தோ்வாகி உள்ளனா். இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் அணி வீரா் சிவம் தாக்கூா் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...