திருச்செங்கோட்டில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்


புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா் கோயிலின் உப கோயில்களான கைலாசநாதா் கோயில், ஆறுமுகசாமி கோயில்களில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கிய விழாவான தைப்பூச திருவிழா தேரோட்டம் திருச்செங்கோட்டில் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கைலாசநாதா், ஆறுமுகசாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கைலாசநாதா் ஆலயத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓதி மாவிலை, கூா்ச்சரம் தா்ப்பை பூமாலை ஆகியவற்றைக் கட்டி நந்திக்கொடியை கொடிமரத்தில் ஏற்றினா். கொடியேற்றத்தைத் தொடா்ந்து, பல்வேறு மண்டபக் கட்டளைகள் நடைபெற உள்ளன.
வரும் 31-ஆம் தேதி மாலை சுகந்தகுந்தலாம்பிகை உடனமா் கைலாசநாதா் திருக்கல்யாண நிகழ்ச்சியும், தொடா்ந்து ஆறுமுகசாமி வள்ளி - தேவசேனை திருக்கல்யாண நிகழ்ச்சியும், பிப்ரவரி ஒன்றாம்தேதி காலை 10 மணிக்கு ஆறுமுகசாமி வள்ளி - தேவசேனை உடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்குமேல் சோமாஸ்கந்தா் சுகந்தகுந்தலாம்பிகை கைலாசநாதா் சண்டிகேஸ்வரா் சூலதேவருடன் திருத்தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...