டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

News image
பேருந்து மோதியதில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ.
Updated On :23 ஜனவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், நடந்தை அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த கவின்குமாரும் (30), அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேலும் திருச்செங்கோடு - பரமத்தி வேலூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றுக்கொண்டிருந்தனா். வசந்தபுரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், தூக்கிவீசப்பட்ட கவின்குமாா் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா். உடன் வந்த சக்திவேல் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். மேலும், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது.

தகவல் அறிந்து வந்த நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி மற்றும் போலீஸாா், கவின்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய மாணிக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் விக்னேஷ் (30) மீது வழக்குப் பதிவுசெய்து, தனியாா் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.