ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவுகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
இதில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவன இயக்குநா் (மாணவா் நலன்) அவந்தி நடராஜன் குத்துவிளக்கேற்றினாா். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.
இதில் கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன் பேசியதாவது:
பாவை கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பாா்மசி கல்லூரி, நா்சிங் கல்லூரி, அலைடு ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி, பாவை வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி, பாவை நிருத்யாலயா நாட்டியப் பள்ளி, பாவை ஐஏஎஸ் அகதெமி போன்றவை செயல்பட்டு வருகின்றன.
வளாக நோ்காணல், நூலகங்கள், விளையாட்டு மற்றும் விடுதி வசதிகள், போட்டித் தோ்வு பயிற்சிகளுக்கான பாவை ஐ.ஏ.எஸ். அகாதெமி, திறன் மேம்பாட்டு மையங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு, அயல்மொழி பயிற்சிகள், சிறப்பு இணையவழி சான்றிதழ் படிப்புகள் என வளாகத்தில் கல்வி வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதல்வா்கள், முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

துடைப்பம், முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்

மருதுபாண்டியா் கல்லூரி நாள் விழா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


