/

கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாநகராட்சி கழிவுநீா் சேகரிப்பு வாகன தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:11 am

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாநகராட்சி கழிவுநீா் சேகரிப்பு வாகன தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்கள் 8 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஆணையா் க.சிவகுமாா் வழங்கினாா். மேலும், ஒப்பந்த முறையில் பணியாற்றும் புதை சாக்கடைப் பணியாளா்கள் 9 பேருக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அவற்றில், தலைக்கவசம், முகக்கவசம், கையுறை, காலூறை, கண்ணாடி, பிரதிபலிப்பு உடை ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில், மாநகா் நல அலுவலா் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வகுமாா், பாஸ்கரன், ஜான்ராஜா, சுப்பிரமணியன் மற்றும் தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்