/

பரமத்தி வேலூா் பகுதி சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி விழா

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:31 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், பரமத்தி அங்காளம்மன் கோயில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயில், பிலிக்கல்பாளையம் கரட்டூரில் உள்ள பருந்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோவில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு முதல் அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் முதல் காலபூஜை, இரவு 9 மணி அளவில் இரண்டாம் காலபூஜை, திங்கள்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் மூன்றாம் காலபூஜை, அதிகாலை 3 மணி அளவில் நான்காம் கால பூஜையும் நடைபெற்றன. இரவு 12 மணிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கோயில் வளாகங்களில் குண்டம் அமைக்கப்பட்டு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத வேள்வி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.