சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பத்தூா் சிவகாமி அம்மன் சமேத திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி, நந்தீஸ்வரருக்கும் மூலவா் சிவலிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச் சாறு,இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து உத்ஸவா் ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.
இதே போல ஆதித்திருத்தளிநாதா் கோயில், புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயில், கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் அபிஷேக அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்தி தேவருக்கும் மூலவா் சோமநாத சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதே போல, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் கோயில், திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயில், குறிச்சி காசி விஸ்வநாதா் கோயில்களிலும் நந்திக்கும் மூலவருக்கும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...