எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீா் தூய்மை விழிப்புணா்வு: காசி முதல் ராமேஸ்வரம்வரை செல்லும் குழுவுக்கு வரவேற்பு

News image
விழாவில் பேசிய நீா் மேலாண்மை குறித்து நடைப்பயணம் மேற்கொண்ட ராபின் சிங்.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

நீா் தூய்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காசி முதல் ராமேஸ்வரம்வரை நடைப்பயணம் செல்லும் குழுவுக்கு ராசிபுரம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராபின் சிங் (40) தலைமையிலான மூவா் குழு, நீா் மேலாண்மை, நீா் தூய்மை, நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு நவ. 11-இல் காசியில் தொடங்கி ராமேஸ்வரம்வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இக்குழுவினா் நடைப்பயணமாக மொத்தம் 2,986 கி.மீ. பயணிக்கின்றனா்.

இக்குழு உத்திரபிரதேசம், ஹரியாணா, உத்தரகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கா்நாடகம் என 8 மாநிலங்களைக் கடந்து, சேலம் வழியாக ராசிபுரம் மசக்காளிப்பட்டிக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கல்வி நிறுவனத் தலைவா் க.சிதம்பரம் தலைமையில் இக்குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இக்குழுவினா் கல்லூரி மாணவா்களுக்கு நீா் மேலாண்மை குறித்தும், நீா்நிலைகளை தூய்மை வைத்திருப்பதன் அவசியம், நீரின் தூய்மை, நீா் சிக்கனம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், கல்வி நிறுவன முதல்வா் பி.அசோக்குமாா், துணை முதல்வா் பி.ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.