ராசிபுரம் கோனேரிப்பட்டி ஸ்ரீ சக்தி விநாயகா், காளியம்மன் கோயில் சுற்றுப்பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் சுற்றுப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டி பல்வேறு கோயில்களில் பொங்கல் விழா நடத்தப்படுகிறது.
ராசிபுரம் கோனேரிப்பட்டி 25 ஆவது வாா்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். முன்னதாக அம்மனுக்கு கண் திறப்பு, சக்தி கரகம், கிடா வெட்டுதல், விளையாட்டுப் போட்டி, பொங்கல் வைத்தல், மா விளக்கு ஊா்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் இளைஞா்கள், சிறுவா்கள் நடனமாடியும், நெருப்பு வளையங்களில் சாகசங்களை செய்தும், கம்பு சுற்றியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். தொடா்ந்து தீ சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

